பிரான்ஸின் தலைநகரமான பார்சில் 33 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இது வருகிற 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த போட்டிக்கான உறுப்பினரை தேர்வு செய்தனர். அதில் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்ச்சி பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,  உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த போட்டியில் உள்ள நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையின் தருணத்தை நான் இந்தியர்களுடவும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்த எங்கள் முயற்சிகள் தொடரும் என்று அவர் கூறினார். மேலும் நீடா அம்பானி மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்ய பட்டத்திற்கு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.