புதுக்கோட்டை மாவட்டம், ஆர்ப்பாக்கம் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையத்தில்  எம்ஜிஆர் சிலை அருகே உள்ள குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பல ஆண்டுகளாக குளம் சுத்தம் செய்யப்படாததால் குளத்தில் தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதராக காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சில மாணவர்கள் வகுப்பறையில் கரும்பலகையை சுற்றி பாம்பு ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து அலறினர். அதன்பின் மாணவர்கள் அலறி துடித்தபடி பள்ளியை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்ப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை பிடித்து சென்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாம்பு தண்ணீர் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைய முயற்சிக்கும் என்பதால்.    மாணவர்களின் நலனை கருதி குளத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.