
ஸ்மார்ட் விஷன் கிளாஸ் ப்ரோ எனப்படும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி தற்போது தமிழகத்தில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடிகள் போல் இல்லாமல் AI தொழில்நுட்ப உதவியுடன் செயல்படக்கூடியது இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கக்கூடிய கேமரா பார்வையற்றவர்கள் முன்னால் இருக்கும் பொருளை, மனிதர்களை அல்லது இடத்தை ஒலி வடிவில் அவர்களுக்கு தெரிவிக்கும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் இந்த கண்ணாடி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 35 ஆயிரம் ரூபாயாகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://shgtechnologies.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.