கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும் விஜயகுமார் (44) எனும் அதிகாரி  வந்தார். அவர் திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்தப் பெண் பயந்து கூச்சலிட்டத்தும், விஜயகுமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் உறவினரான உத்தமன்(32) என்பவர் விஜயகுமாரை கத்தியால் குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். பின்பு விஜயகுமாரை கத்தியால் குத்திய உத்தமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.