
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மம்தாவை கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, மம்தாயுடைய செயல் கண்டிக்கத்தக்கது. பாலியல் பலாத்காரம் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்து, அவர்களுக்கு பணம் கொடுக்கிறார். அதன் பின் எல்லாம் முடிந்தது என்று சொல்கிறார். அதோடு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கு ரேட் கார்ட் நியமிக்கின்றார். இவ்வாறு இவர் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் நேற்று முன்தினம் பேசினார். அவர் கூறியதாவது, முன்னதாக மம்தா மீது நம்பிக்கை இருந்தது தற்போது அந்த நம்பிக்கை இல்லை. எனது பெண்ணின் உடலைப் பார்த்தால் யாரும் இதை கொலை வழக்கு என்று தான் கூறுவார்கள். ஆனால் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டார் என மருத்துவமனையில் கூறியதாக மம்தா கூறினார். மேலும் என்னுடைய மகளின் உடல் அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.