
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹனிரோஸ். இவர் 14 வயதில் பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் வீரசிம்கா ரெட்டி என்ற திரைப்படத்தில் பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து நடித்ததால் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காவிடிலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அதன் பிறகு வணிக வளாகங்கள் திறப்பு மற்றும் கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இந்நிலையில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது நடிகை ஹனி ரோஸ் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் பின்னர் ஜாமீனில் வெளியே வராத பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.