சென்னை மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவில் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கிய நிலையில் இருந்தது.

அதனால் பிரியங்கா குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார். பின்பு குழந்தை நீண்ட நேரம் ஆகியும் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. அதனால் அதிர்ச்சிடைந்த பிரியங்கா குழந்தையை எழுப்ப முயற்சித்தார்.  ஆனால் குழந்தை அசையவில்லை.

இதனால் பதறிய பிரியங்காவும் கார்த்திக்கும் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் இறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரியவந்தது. அதனால் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குழந்தையின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.