
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் தீவிரமாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரீயா பவானி சங்கர், ரெஜினா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அஜித்தை காண அங்கிருக்கும் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் அஜித்தை காண நடிகை பாவனா அங்கு வந்துள்ளார். அவரிடம் நடிகர் அஜித் மன்னிப்பு கேட்டார். அதாவது அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் அப்போது அங்கே பாவனா வர, அஜித் அவரிடம் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது பாவனா நீங்க லேட்டா வருவீர்கள் என்று சொன்னதால் நானும் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் என கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Ajithkumar met Actress Bhavana in Azerbaijan during #VidaaMuyarchi shoot🎬#AK asks Apology to Bhavana for Being late👏❣️. How cute their convo is🥰pic.twitter.com/MVJtIqSMPg
— AmuthaBharathi (@CinemaWithAB) December 25, 2023