அமெரிக்காவில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி மகளிர் பாஸ்கெட்பால் அணியின் பயிற்சியாளர், போட்டி முடிவில் வீராங்கனையின் முடியைப் பிடித்து இழுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது வடக்கு நார்த்வில்லே உயர்நிலைப்பள்ளியின் 81 வயதான பயிற்சியாளர் ஜிம் ஸுல்லோ, போட்டிக்குப் பிறகு அழுதுகொண்டு இருந்த அணியின் முக்கிய வீராங்கனை ஹெய்லி மான்ரோவின் முடியை வலியோடு இழுத்து, கடுமையாக சாடும் காட்சி வீடியோவில் தெளிவாக உள்ளது. ஹெய்லி அந்த இடத்திலிருந்து விலக முயற்சி செய்தபோதும், பயிற்சியாளர் தொடர்ந்து அவரை சாடுவதும், மற்றொரு வீராங்கனை அவரை பாதுகாக்க முயற்சிப்பதும் காட்சியில் தெரிகிறது.

இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். இனி அந்த நபர் அணிக்கு பயிற்சி கொடுக்க மாட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக பயிற்சியாளர் கூறும் போது போட்டி முடிவடைந்த பிறகு அந்த வீராங்கனை தன்னிடம் கோபத்தோடு தவறான முறையில் நடந்து கொண்டதால் அடுத்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.