இந்தியாவைப் பொறுத்த வரையில் பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெளிநாட்டு பயணங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பித்த சில மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் அதே சமயம் அரசு அலுவலகங்களுக்கும் அலைய நேரிடும். ஆனால் தற்போது இந்த பாஸ்போர்ட்டை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து ஐந்து நாட்களுக்குள் எளிதாக பெற்று விடலாம். இது தட்கல் பாஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிறது.

இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சரியாக இணைத்து தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு செய்த ஐந்து நாட்களுக்குள் உங்களுடைய பாஸ்போர்ட் தயாராகிவிடும். காவல்துறை விசாரணையையும் சேர்த்து பாஸ்போர்ட்டை கையில் பெற ஒரு மாத காலம் மட்டுமே ஆகும். இதனைப் பெற நீங்கள் 3500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பாஸ்போர்ட்டுக்கு தத்து எடுக்கப்பட்ட குழந்தை, தந்தை அல்லது தாயார் இறந்து விட்ட மைனர் குழந்தை மற்றும் வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்க முடியாது.