
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீச்சல் உடையில் கடற்கரையில் உடலை வில்லாக வளைத்து யோகாசனம் செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram