
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌதமி நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் என்பவர் நடித்திருந்தார்.
மலையாள நடிகையான அவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை எஸ்தருக்கு தற்போது 22 வயது ஆகும் நிலையில் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்றுள்ள அவர் அங்கு பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ரீல் மகளா இது என பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
