
பிரபல விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 7 சீசர்கள் நிறைவடைந்த நிலையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் இருந்து நடிகர் கமல் ஹாசன் விலகப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் ” 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக வரவிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முந்தைய சீசனில் நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடிகர் சிம்பு மற்றும் மற்றொரு எப்பிசோடில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
