
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர் ஐபிஎல் தொடரை தொடங்கியது, ஐபிஎல் தொடரை 10 அணிகள் கொண்டு வந்து விரிவு படுத்தியது போன்ற பல்வேறு விஷயங்கள் ஜெய்ஷா அறிமுகப்படுத்தியதாகும்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டியை துபாயில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது தம்முடைய சாதனை என ஜெய்ஷா பெருமிதமாக கூறியுள்ளார். மேலும் இது என்னுடைய மிகப்பெரிய சாதனை என்று ஜெய்ஷா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.