தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் கவின். இவர் டாடா என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தார். அதன் பிறகு கவின் நடிப்பில் சமீபத்தில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது கவின் பிளடி பெகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் நிலையில் பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளனர். நடிகர் கவின் பிச்சைக்காரனாக இந்த படத்தில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் பிச்சைக்காரனாக எப்படி நடிப்பது என்பதற்காக உண்மையில் அவர் பிச்சை எடுத்ததாக ஒரு பேட்டியில் அவரை கூறியிருந்தார். மேலும் தற்போது பிளடி பெகர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.