
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தியாகராஜனுக்கும் 28 வயதிலும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தியாகராஜன் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் 5 மாதக் கருவை கலைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிறை மாத கர்ப்பிணியான இளம்பெண் தாராபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இளம்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தருவதாக கூறிய தியாகராஜன் திடீரென தலைமறைவானதால் அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு அறிமுகமான மற்றொரு பெண்ணிடம் நிலைமையை கூறியுள்ளார். மேலும் இந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது.
தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி மதுகரையை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை வாங்கி கொண்டு குழந்தையை விற்று மருத்துவமனை கட்டணத்தை செலுத்தியுள்ளார். சட்டப்படி குழந்தையை தத்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் அந்த பெண்ணை தவறாக பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தன்னை ஏமாற்றிய தியாகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தியாகராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.