
கேரளாவில் உள்ள நெல்லியம்பதி பகுதியில் சுஜய் சர்தார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய சாம்பா என்ற மனைவி இருந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டதால் நெல்லியம்பதி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தன் மனைவியை சுஜய் காட்டுப்பாதை வழியாக ஜீப்பில் அழைத்து சென்றார். ஆனால் அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் செல்லும் வழியிலேயே ஜீப்பில் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரால் அதிலிருந்து இறங்க முடியாததால் அந்த இடத்திற்கு இரு செவிலியர்கள் வந்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றபோது திடீரென ஒரு காட்டுயானை வழிமறித்தது. இதனால் அவர்கள் ஜீப்பை விட்டு இறங்காமல் இறங்காமல் இருந்த நிலையில் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலையிலும் யானை அங்கிருந்து விலகவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டு பகுதிக்குள் சென்றது. பின்னர் வனத்துறையினர் அவர்களை பத்திரமாக காட்டுப்பகுதிக்குள் இருந்து அளித்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் தாய் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.