
ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி கோரி உள்ளார்.
குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திட்ட அதிகாரியான சிநேகலதா சாஹூ உட்பட சக அதிகாரிகள் யாரும் உதவ முன் வரவில்லை. பின்பு பிரியதர்ஷினியின் குடும்பத்தினர் அலுவலகத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி குறிப்பிட்ட அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.