திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.

அதன் பின் நடைப்பாதை கடைகள் அகற்றப்பட்டதுடன், வாகனங்கள் வருவதையும் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வருகிற 13-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் பழனி மக்களின் பொது வழி பாதையை பாதுகாத்திடவும், நகராட்சியின் உரிமையை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்து நடைபெறும் என முக்கியசாலைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.