
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா என்பது ஒரே தேசியம் கிடையாது. பழமொழிகள் பேசும் பல்வேறு இன மக்கள் வாழும் தேசங்களின் ஒன்றியம். இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை மற்றும் கலாச்சாரம் என தனித்தனி மொழி மற்றும் வழிபாடு போன்றவைகள் வெவ்வேறாக உள்ளது. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். தமிழ்நாட்டிற்குள் கூட பல சாதி மற்றும் குடிகள் இருக்கிறது. அனைத்து மக்களின் மொழி தேசியத்திற்கும் முன்னுரிமை என்பது தர வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று அம்பேத்கர் கூட கூறியுள்ளார்.
மும்மொழி கல்விக் கொள்கையில் என்ன இருக்கிறது. கண்டிப்பாக ஹிந்தி மொழியை தான் கற்க சொல்கிறது. பிரதமரையும் அமைச்சர்களையும் தேர்வு வைத்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா.? நாட்டில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன.வரியை மட்டும் பெற்றுக்கொள்ளும் நீங்கள் எங்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றாலும் ஹிந்தியில் மட்டும் தான் அனுப்புகிறீர்கள். அவ்வளவு ரோஷம் இந்தால் எதற்காக தமிழ்நாட்டிடம் இருந்து வரி பெற்று கொள்கிறீர்கள். ஹிந்தி மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூறுவது சரி கிடையாது. பிரித்தாலும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ளவர்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளட்டும் எதற்காக நீங்கள் திணிக்கிறீர்கள் என்று கூறினார்.