
ஒவ்வொருவருக்கும் ஆசை, கற்பனை, கனவு ஆகியவை வித்தியாசமானதாக இருக்கும். ஒரு சிலர் அது நிஜத்தில் நடக்க வேண்டும் எனவும் விரும்புவர். அப்படி ஒருவர் தனது கனவு குறித்த பதிவு ஒன்றை இணையத்தில் பதிவிட அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதன்படி, நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்து deep fake ai தொழில்நுட்ப மூலம் பிரதமர் மோடி அவர்களின் முகத்தில் தோனி அவர்களையும், முதல்வர் ஸ்டாலின் அவர்களது முகத்தில் தளபதி விஜய் அவர்களையும் வடிவமைத்து

வருங்காலத்தில் தமிழக முதல்வராக விஜய் அவர்களும், இந்தியாவின் வருங்கால பிரதமராக தோனி அவர்களும் வரவேண்டும். இவர்கள் இருவரும் இப்படி அமர்ந்து பேச வேண்டும் என்பது எனக்கு கனவாக வந்துள்ளது என நக்கலடித்தபடி பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.