குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வாகன பேரணி நடத்தினார். அப்போது இரு புறமும் மக்கள் நின்ற நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் மோடியுடன் அந்த மாநில முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இருந்தனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடியின் வாகனங்கள் வரிசையாக சென்று ஒத்திகை பார்க்கப்பட்டது. அதாவது பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக இந்த ஒத்திகை நடைபெற்றது.

அப்போது ஒரு 17 வயது சிறுவன் சாலையின் ஒரு புறத்தில் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது திடீரென பாதுகாப்பு வாகனங்கள் வரும்போது சைக்கிளை திருப்பி ஓட்டி சென்றான். உடனடியாக அந்த சிறுவனை காவல் உதவி ஆய்வாளர் பிஎஸ் கத்வி தடுத்தார். அதோடு அந்த சிறுவனின் முடியை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறை விட்டார் .மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அவரை பணியிட மாற்றம் செய்ததோடு ஒரு வருடத்திற்கு அந்த காவல் உதவி ஆய்வாளரின் சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளனர்.