
ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடர்ந்த நிலையில் 2 வருடங்களாக போர் நீடித்து வருகிறது. அதாவது நோட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர்வது தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி போரை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் போச்சு வார்த்தைகள் பலனளிக்காததால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய பிரதமர் மோடியால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார். கடந்த மாதம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், அமெரிக்கா ஏற்கனவே பிரதமர் மோடி ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கியும் போரை நிறுத்த பிரதமர் மோடியால் முடியும் என்று கூறியுள்ளார்.
அதாவது உலகில் பொருளாதாரம் மிக்க நாடாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கிறது. தற்போது உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் பிரதமர் மோடி இருப்பதால் அவர் உதவினால் போரை நிறுத்த வாய்ப்புள்ளது என்றும் இந்தியாவில் வைத்து இதற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.. மேலும் முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி போர் மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.