மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது மீதான விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் எம்பி கௌரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய கௌரவ கோகாய், பிரதமர் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை? பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியதோடு மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் மொத்த நாடும் எரிவதாக அர்த்தம் என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் இளைஞர்களுக்கு நீதி வேண்டும். ஒட்டு மொத்த அவையும் மணிப்பூருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை காட்ட வேண்டும். மேலும் பிரதமர் மோடி அவைக்கு வந்து தனது தரப்பு விளக்கத்தை கூற வேண்டும் என அவையில் கௌரவ் கோகாய் பேசி உள்ளார்.