பிரபல நடிகர் ஜெகன் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், தனது தாயார் உயிரிழந்ததாக ஜெகன் கண்ணீருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறும் அனைவருக்கும் நன்றி. கடைசிவரை அம்மாவை மீட்க போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.