ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சாட் மெக்வீன். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் டச் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த படத்தைத் தொடர்ந்து டெத் ரிங், பயர்பவர், ரெட் லைன் உள்ளிட்டா பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அதோடு இவர் கார் ரேசிலும் கொடிகட்டி பறந்தவர். இவருக்கு தற்போது 63 வயது ஆகும் நிலையில் கடந்த புதன்கிழமை உடல்நல குறைவினால் காலமானார். இந்த தகவலை அவருடைய குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.