
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் அதிபர் ஷேக் ஹசீனா அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால் மீண்டும் கலவரம் தலை தூக்கியது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இருப்பினும் தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை என்பது நீடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இடைக்கால அரசு புதிய தலைவராக முகமது யூனிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள பிரபல நடிகர் சாந்தோ கான் மற்றும் அவருடைய தந்தை செலிம் கான் ஆகியோரை போராட்டக்காரர்கள் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதாவது திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் தேச தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ராஜ்மானின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்துள்ளார்.
இதில் முஜிபுர் ராஜ்மான் வங்கதேசத்தின் முதல் பிரதமர் ஆவார். இந்த படத்தில் செலின் கான் அவருடைய மகன் சாந்தோ கானை அறிமுகப்படுத்தினார். இதனால் தான் அவரையும் அவருடைய மகனையும் போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.