
பிரபல இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். தேன் சிந்துவே வானம் மற்றும் தூண்டில் மீன் உட்பட எட்டு படங்களை இயக்கியுள்ள இவர் மௌன ராகம், சின்ன கவுண்டர், ஒரு கைதியின் டைரி, அமரன் அமராவதி, ரோஜாவை கிள்ளாதே, காதல் கோட்டை மற்றும் அரண்மனை காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.