
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி திரையுலகில் கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பொன்னியின் செல்வன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை கண்டுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகை ஆனார்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் அவை அனைத்தும் நழுவி சென்றது தொடர்பாக செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது 2003ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சல்தே சல்தே என்ற படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டார்.
இதேப்போன்று முன்னா பாய் எம்பிபிஎஸ், ‘மெயின் ஹூன் நா’ மற்றும் வீர்- சாரா போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டார். அதன்பின் இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது சரியான காரணங்கள் இல்லாமல் ஷாருக்கான் உடன் நடிக்கவிருந்த படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார் . மேலும் ஐஸ்வர்யா ராய் கூறியதை கேட்டு ஷாருக்கான் இவ்வாறு நடந்ததற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன் என்று பதில் கூறினார்.