பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி உருவான விடாமுயற்சி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸுக்கு முன்பே உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமே விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் 14 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன சவதீகா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. நாளை படம் ரிலீஸ் ஆவதால் அனிருத் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விடாமுயற்சி பிளாக்பஸ்டர் என பதிவிட்டார். அதற்கு நடிகை ரெஜினா கண்கள் மட்டும் இருக்கும் எமோஜியை பதிவிட்டார். உடனே அந்த நபர் umma என்ன பதிவேட்டு முத்தம் கொடுக்கும் இமோஜியை போட்டுள்ளார். இதோ அந்த பதிவு..