பிரபல மாடலும் நடிகையுமான ரிஸ்டா லபோனி ஷிமானா (39) இன்று காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ் சஜாத் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஷிமானா 2006-ல் சின்னத்திரையில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.