
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. இவர் ராசாவின் மனசில படம் தொடங்கி பல பாடல்களை பாடியுள்ளார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் வீட்டில் சுயநினைவு இன்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.