
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக இருப்பவர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்திற்கு சம்பவ நாளில் வேல்முருகன் தன்னுடைய காரில் சென்றார்.
அப்போது அங்கிருந்த பெட்ரோல் நிலைய அதிகாரிக்கும் வேல்முருகனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது மெட்ரோ நிலைய அதிகாரியை வேல்முருகன் தாக்கியுள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இன்று பாடகர் வேல்முருகனை கைது செய்துள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.