பேச்சுலர் இன் பாரடைஸ், ப்ளீஸ் டோண்ட் ஈட் தி டெய்சீஸ் உள்ளிட்ட நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜேனிஸ் பெய்ஜ் (101) காலமானார். இவர் 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது பற்றி அவர் கூறுகையில், 22 வயது இருக்கும்போது அந்த சம்பவம் நடந்தது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய 90 வயதில் கூட நடிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து நடித்த இவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.