
பிரபல பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித், 89 வயதில், இன்று (27 செப்டம்பர் 2024) அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் புகழ்பெற்றவர், மினெர்வா மெக்கோனகல் என்ற கதாபாத்திரத்தை ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர். அவருடைய மறைவுக்கு அவரது குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர், மேலும் அவர் 2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை விட்டு சென்றுள்ளார்.
மேகி ஸ்மித் திரைத்துறையில் மட்டுமின்றி தியேட்டரிலும் வலுவான முத்திரை பதித்து 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி மற்றும் காலிஃபோர்னியா சூய்ட் திரைப்படங்களில் நடித்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பிரபலமான படைப்புகள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்கிறார்கள்.
ஹாரி பாட்டர் படங்களில் மினெர்வா மெக்கோனகலாக அவர் வெளிப்படுத்திய பேராசிரியர் கதாபாத்திரம், உலகம் முழுவதும் ரசிகர்களால் மிக்க ஆதரவு பெற்றது. அவரது மறைவுக்கு ஹாரி பாட்டர் ரசிகர்கள் உலகம் முழுவதும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.