
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இந்த நிலையில் பிரபாஸ் மிகவும் சோம்பேறி, திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார், ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும், அதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பிரபாஸ் கூறுகையில், சோம்பேறி, கூச்ச சுவாபம், மக்களை சந்திக்க முடியாது என இந்த மூன்று பிரச்சனைகள் எனக்கு உள்ளது. நான் நிஜ வாழ்க்கையிலும் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை என்று கூறியுள்ளார்.