
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் விஜயகுமார் (47) என்பவர் வாசித்து வருகிறார். இவர் பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தன் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் விஜயகுமார் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.