சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க சென்ற மூன்று பேருக்கும், பாலச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் கோபமடைந்த மூன்று பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலச்சந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பாலச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் தப்பி ஓடிய மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.