
சென்னை மாவட்டம் சூளைமேடு அபி நகரில் நேற்று முன்தினம் மாலை நேரம் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி ஒரு மெக்கானிக் கடைக்குள் புகுந்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண் உள்பட இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் கொளத்தூரைச் சேர்ந்த செந்தில்(46) என்பது தெரியவந்தது. சாலையின் குறுக்கே ஒரு மாடு வந்தது. அப்போது பதற்றத்தில் செந்தில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.