
தான்சானியா நாட்டில் எம்பெம்பேலா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த 3 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பல மோட்டார் சைக்கிள்கள் மீது அந்த லாரி மோதியது.
இந்த பயங்கர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு பலர் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.