
தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது.
அதன் பிறகு மாயமான 134 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1,65,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தெற்கு பிரேசிலில் இன்னும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.