
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு குறைவான வாக்குகளால் வெளியேறினார். அதன் பிறகு இவருக்கு பண வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் ஜனனி சமீபத்தில் தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க