
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு தம்பதி சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர்.
அதாவது சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தமிழ்ச்செல்வி மற்றும் கோபாலகிருஷ்ணன் தம்பதியினர் தானமாக வழங்கிய நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தாங்கள் பிறந்த கிராமத்தில் குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நல்ல நோக்கத்தோடு அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினரின் செயல் அந்த கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.