
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று பயங்கரமாக அழுத சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கழுத்து மற்றும் கைகளில் அறுபட்ட நிலையில் கிடந்தது. இந்த குழந்தையை மரியம் பீவி என்பவர் மீட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு அனுமதித்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அபிநயா (18) என்ற பெண் சிக்கினார். அவரிடம் நடத்தி விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்தது. அதாவது இந்த பெண்ணை தன் வீட்டின் அருகே வசிக்கும் மகேந்திரன் என்ற 42 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இவர் கொத்தனார் ஆக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி விட்டது. இவர் கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததால் தான் கர்ப்பமானதாகவும் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்பதால் குழந்தை பிறந்தவுடன் அதனை கழுத்தை அறுத்து வீசி சென்றதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மகேந்திரனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்தி விசாரணையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக அபிநயாவுக்கு 17 வயது இருக்கும்போது அவரை சீரழித்தது தெரிய வந்தது. மேலும் இவரை கைது செய்த காவல்துறையினர் குழந்தையை கழுத்தை அறுத்த காரணத்திற்காக அபிநயாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.