
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் எடுப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் குழந்தை பிறந்து 15 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் இருந்தால் அவர்கள் உடனடியாக சேர்த்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொதுவாக குழந்தை பிறந்த பிறகு 15 வருடங்களுக்குள் கண்டிப்பாக பெயர் சேர்க்க வேண்டும். அவர் பெயர் சேர்க்காதவர்கள் அந்தப் பணியினை உடனடியாக செய்ய வேண்டும். மேலும் அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.