தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். பானு பிரியா-சரவணக்குமார் தம்பதியின் மகளான அண்ணாமலையார் பள்ளி மாணவி நந்தினி, தேர்வில் அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்து 600க்-கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு சாதனைப் புரிந்துள்ள நந்தினி, ஒரு கூலித் தொழிளாலியின் மகள் ஆவார். +2 தேர்வில் சாதனைப்படைத்துள்ள நந்தினி தனக்கு ஆடிட்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். தற்போது மாணவி கனவு நிறைவேற வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.