ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகேந்திரனின் 28 வயதான மனநலம் குன்றிய மகன் அருண் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனிடம் மகன் பீடி கேட்டுள்ளார். ஆனால் மகேந்திரன் பீடி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண் வீட்டின் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகேந்திரனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அக்கம் பக்கத்தினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.