
சென்னை கிண்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார் இவர் . காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கார்த்திக் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை தேடி வந்தனர். நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கார்த்திகை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.