
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் அவரை தங்களது பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாகவும் கூறப்படுகின்றது.