பெங்களூரில் கட்டப்பட்டு வரும் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி விரைவில் திறக்கப்படும் என டிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். கட்டுமான பணிகள் ஏறக்குறைய தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதில் மூன்று உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், 45 பயிற்சி மைதானங்கள், உட்புற கிரிக்கெட் ஆடுகளங்கள் மற்றும் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் ஆகியவற்றை கொண்டுள்ளதாகவும் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்